உள்ளூர் செய்திகள்

கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்த காட்சி.

குமாரபாளையம் அருகே பத்ரகாளியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

Published On 2023-05-30 13:16 IST   |   Update On 2023-05-30 13:16:00 IST
  • குமாரபாளையம் அடுத்த கோட்டைமேடு பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜன் என்பவர் காவலாளியாக உள்ளார்.
  • கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த கோட்டைமேடு பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜன் என்பவர் காவலாளியாக உள்ளார்.

நேற்று இரவு வழக்கம் போல் கோவில் கேட்டை பூட்டி விட்டு, ராஜன் கோவி லினுள் படுத்து தூங்கினார். இந்த நிலையில் இன்று காலை எழுந்து பார்த்த போது, ராஜனின் செல்போனை காண வில்லை. இதையடுத்து கோவில் முழுவதும் தனது செல்போனை தேடி பார்த் துள்ளார். அப்போது, கோவில் பூட்டு உடைக்கப் பட்டு, கேட் திறந்து கிடந்தது. மேலும் அங்கிருந்த உண்டிய லும் உடைக்கப்பட்டு, அதி லிருந்த பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த ராஜன், கோவில் பூசாரியான வேலுமணி மற்றும் கோவில் நிர்வாகிக ளுக்கு தகவல் அளித்தார்.

பின்னர் இதுகுறித்து குமாரபாளையம் போலீ சாருக்கு, கோவில் நிர்வாகி கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் நிபு ணர்களும் வரவழைக்கப் பட்டு கைரேகைகள் சேகரித்தனர். உண்டியலில் சுமார் ரூ. 2 1/2 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் நகைகள் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள குமார பாளையம் போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News