உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 3 பேர் கைது

Published On 2023-11-08 07:23 GMT   |   Update On 2023-11-08 07:23 GMT
  • மோகனா திருமணம் ஆகி தனது கணவர் சிவம்பரசனுடன் வேல கவுண்டம்பட்டியில் உள்ள திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார்.
  • வீட்டின் கதவை அடையாளம் தெரியாத 3 பேர் இரும்பு கம்பியால் உடைத்துக்கொண்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 59). இவரது மகள் மோகனா.

மோகனா திருமணம் ஆகி தனது கணவர் சிவம்பரசனுடன் வேல கவுண்டம்பட்டியில் உள்ள திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார்.

திருட முயற்சி

இந்த நிலையில் மோகனாவிற்கு உடல் நிலை சரியில்லாததால் செல்வராஜ் தனது காரில் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு மீண்டும் வேலகவுண்டம்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவை அடையாளம் தெரியாத 3 பேர் இரும்பு கம்பியால் உடைத்துக்கொண்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் திருடர்கள் திருடர்கள் என சத்தம் போட்டு அருகில் உள்ளவர்களை அழைத்தார். அப்போது அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோட முயன்ற 3 பேரையும் பொதுமக்கள் பிடித்து வேலகவுண்டம்பட்டி போலீசாரிடம் ஒப்ப டைத்தனர்.

போலீசார் 3 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை புதிய பெருங்களத்தூர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகன் பாஸ்கர் என்கிற பல்லு பாஸ்கர் (25), திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பாரதி நகரை சேர்ந்த சவுந்தர்ராஜ் மகன் யாழின் (23), அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் அஸ்வின் (20) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இவர்கள் 3 பேரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததும் திருவள்ளுவர் நகரில் மோகனா என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததும் தெரிய வந்தது.

ஜெயிலில் அடைப்பு

அதனையடுத்து வேல கவுண்டம்பட்டி போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற பாஸ்கர் என்கிற பல்லு பாஸ்கர், யாழின், அஸ்வின் ஆகிேயாரை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News