உள்ளூர் செய்திகள்

நாகை அருங்காட்சியகத்தை ஷா நவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்து ஆய்வாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

நாகை அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும்- எம்.எல்.ஏ உறுதி

Published On 2022-11-05 08:03 GMT   |   Update On 2022-11-05 08:03 GMT
  • அருங்காட்சியகம் மேம்பாட்டில் அரசு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
  • வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களும், கலை பொருட்களும் பாதுகாப்பின்றி உள்ளது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகத்தை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். போதிய இட வசதி மற்றும் கட்டமைப்பு இல்லாததால், வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்களும், கலைப் பொருட்களும், முக்கிய ஆவணங்களும் பாதுகாப்பின்றி உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, இது தொடர்பாக சட்டப்பே ரவையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசியதாகவும், அதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் அருங்காட்சியகம் பழைய பாரம்பரிய கட்டடத்திற்கு மாற்றப்படும் என்றும், அந்த பாரம்பரிய கட்டிடம் ரூ.1.4 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டு புதிய காட்சிக் கூடங்களுடன் மேம்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளதை எம்.எல்.ஏ சுட்டிக்காட்டினார்.

அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டு மென்றும், நாகையின் வரலாற்றுச் சிறப்புக்கு ஏற்ப அருங்காட்சியகம் மேம்பாட்டில் அரசு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டுமென்றும் அங்கிருந்தவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஷாநவாஸ் எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

Tags:    

Similar News