உள்ளூர் செய்திகள்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை தூத்துக்குடி வருகை

Published On 2023-05-16 13:48 IST   |   Update On 2023-05-16 13:48:00 IST
  • மாநாடு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற உள்ளது.
  • மே 18 இன எழுச்சி 12-வது மாநாடு சென்னையில் நடைபெற்றது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் மாநாடு

நாம் தமிழர் கட்சி சார்பில் 13-வது இன எழுச்சி மாநாடு வருகிற நாளை மறுநாள் (18-ந் தேதி) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார்.

மே 18 இன எழுச்சி முதல் மாநாடு மதுரையில் நடைபெற்றது. 12-வது மாநாடு சென்னையில் நடைபெற்றது. 13-வது மாநாடு தற்போது தூத்துக்குடி எட்டையாபுரம் சாலை புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெறுகிறது.

சீமான் ஆலோசனை

இதில் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள கட்சியினர், தமிழர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டு ஏற்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சிவக்குமார், இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் இசை மதிவானன், மண்டல ஒருங்கி ணைப்பாளர்கள் தூத்துக்குடி ராஜசேகர், நெல்லை சத்யா, கன்னியாகுமரி பெல்வின்ஜோ, தென்காசி அருண்சங்கர் மற்றும் தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வேல்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

மே 18 இன எழுச்சி மாநாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும், மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை தூத்துக்குடி வருகிறார். அவருக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News