உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அருகே முருகன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை
- நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர்.
- காலையில் கோவில் குருக்கள் வந்து பார்த்தபோது உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கொள்ளை நடந்து இருப்பது தெரியவந்தது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த குமரஞ்சேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற குமாரசாமி முருகன்கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூட்டிச்சென்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர். அவர்கள் கடப்பாரையால் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளினர்.
மேலும் அங்கிருந்த பீரோவை உடைத்து ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் பூஜை பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். காலையில் கோவில் குருக்கள் வந்து பார்த்தபோது உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கொள்ளை நடந்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
முருகன் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.