பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
முச்சந்தி மகாகாளியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா
- அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ முச்சந்தி மகா காளியம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளன.
ஆலயத்தின் புரட்டாசி பொங்கல் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.
இதனையொட்டி, 500க்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து வீட்டில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை தாமரைக்குளம் தென்கரைதெரு, தர்ம கோவில் தெரு, மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆலயத்திற்கு எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகளுக்குப்பிறகு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று நீர்நிலையில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சக்தி கரகம் முன்னே செல்ல, ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம், வந்தடைந்தது.
அங்கு, முளைப்பாரியை வைத்து, பெண்கள் கும்மியடித்து, குலவையிட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து குளத்தில் முளைப்பாரி விடப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.