உள்ளூர் செய்திகள் (District)

புழுதி பறக்கும் சாலை.

பாவூர்சத்திரத்தில் புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-01-06 08:56 GMT   |   Update On 2023-01-06 08:56 GMT
  • புதிதாக அமைக்கப்படும் சாலையில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
  • புழுதி பறக்கும் சாலையில் வாகனம் ஓட்ட பல்வேறு தரப்பினரும் திணறி வருகின்றனர்.

தென்காசி:

நெல்லை-தென்காசி நான்கு வழி சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம், ஆலங்குளம் நகர்புற பகுதியில் தற்போது தான் பழைய தார் சாலைகளை பெயர்த்து அகற்றிவிட்டு ஜல்லிகளை கொட்டி மட்டப்படுத்தும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிதாக அமைக்கப்படும் சாலையில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஆனால் அதனை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் செய்யாமல் அலட்சி யம் காட்டி வருகின்றனர்.

பாவூர்சத்திரம் ஆலங்குளம் நகர்ப்புற பகுதியில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி கல்லூரிகளுக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் அரசு, தனியார் துறை ஊழியர்கள் புழுதி பறக்கும் சாலையில் வாகனம் ஓட்ட திணறி வருகின்றனர்.

பலருக்கு சுவாச கோளாறும் அதிகம் ஏற்படுவதாகவும் இதற்கு தீர்வு காண புழுதி பறக்கும் சாலையில் தண்ணீரை பீச்சி அடித்து சாலை அமைக்கவும் வாகன ஓட்டிகள் எவ்வித சிரமம் இன்றி பயணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். 

Tags:    

Similar News