உள்ளூர் செய்திகள்

குழாய் உடைப்பை சரிசெய்ய சாலையின் ஓரம் பள்ளம் தோண்டப்பட்டு மண்ணை சாலையில் கொட்டிவிட்டு சென்றதை படத்தில் காணலாம்.

சாலை ஓரத்தில் தோண்டபட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-05-06 09:45 GMT   |   Update On 2023-05-06 09:45 GMT
  • பாதை எது, குழி எது என்று தெரியாமல், 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் உள்ள மண் திட்டு மீது மோதி விபத்துக்கு ள்ளானது.
  • சம்மந்த ப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடவேண்டும்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் இருந்து போச்சம்பள்ளி செல்லும் சாலையில் உள்ள நேரு நகர் அருகே சாலை ஒரத்தில் கூட்டு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கு பள்ளம் தோண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டது.

இந்த குழாய் அடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட மண்ணை சாலையில் கொட்டிவிட்டு எந்த அறிவிப்பு பலகையும் வைக்காமல் அலட்சியமாக அப்படியே விட்டு சென்று விட்டனர்.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் பாதை எது, குழி எது என்று தெரியாமல், 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் உள்ள மண் திட்டு மீது மோதி விபத்துக்கு ள்ளானது.

இது குறித்து சம்மந்த ப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடவேண்டும் என்று வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News