உள்ளூர் செய்திகள்
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி உதவி பேராசிரியர் பலி
- பிரின்ஸ் ஷெல்டன் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
- அக்கம் பக்கத்தினர் பிரின்ஸ் ஷெல்டனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை:
பாளை சேவியர் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் ஷெல்டன் (வயது 28). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, கங்கைகொண்டான் சிப்காட் அருகே முன்னால் சென்ற டிராக்டர் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
இதனை சற்றும் எதிர்பாராத பிரின்ஸ் ஷெல்டன் டிராக்டரின் பின்புறத்தில் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கங்கை கொண்டான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.