உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
- சிவபதி மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மினி வேன் டிரைவர் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சிவபதி (வயது 34). டிரைவர். இன்று அதிகாலை அவர் மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருவள்ளூர் அடுத்த கோவிந்தமேடு பஞ்சாயத்து அலுவலகம் எதிரே சென்றபோது எதிரே வேகமாக வந்த மினிவேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மினி வேன் டிரைவர் குறித்து விசாரித்து வருகிறார்கள்.