உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நிலக்கோட்டையில் அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற தாய், மகன் கைது

Published On 2022-09-12 04:29 GMT   |   Update On 2022-09-12 04:29 GMT
  • வருவாய்த் துறை அதிகாரிகள் அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றது குறித்து பெண்ணிடம் விசாரித்தனர்.
  • அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியைச் சேர்ந்த ராணி(62). நிலக்கோட்டையில் பத்திர எழுத்தராக உள்ளார். இவர் அணைப்பட்டி - நிலக்கோட்டை சாலையில் திரவியம் நகர் பகுதியில் உள்ள அரசு இடத்தை கடந்த சில தினங்களாக சுத்தம் செய்து, கம்பி வேலி போட முயற்சி செய்து கொண்டிருந்தார்.

இதை அறிந்த நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ராணியிடம் சென்று அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றது குறித்து விசாரித்தனர்.

அப்போது ராணி அவரது மகன் விஜயபாஸ்கர் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜிடம் கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குப்பதிவு செய்து ராணி மற்றும் விஜயபாஸ்கர் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News