மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தேரோட்டம் 3-ந்தேதி நடக்கிறது
- சேவூர் அருகே பிரசித்தி பெற்றதும் “மேலதிருப்பதி'' எனப் போற்றப்படுவதுமான ஸ்ரீதேவி -பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
- சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத்தேர் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
அவினாசி :
அவினாசி வட்டம் சேவூர் அருகே பிரசித்தி பெற்றதும் "மேலதிருப்பதி'' எனப் போற்றப்படுவதுமான ஸ்ரீதேவி -பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவில் மொண்டிபாளையத்தில் உள்ளது.
இந்த கோவிலில் தை மாத தேர்த்திருவிழா வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியாக பிப்ரவரி 3-ந்தேதி காலை 6 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்று, பகல் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
இதைத்தொடர்ந்து பிப்ரவரி 4-ந்தேதி பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா புறப்பாடும், பிப்ரவரி 5 -ந்தேதி காலை சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத்தேர் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
பிப்ரவரி 6-ந்தேதி மகாதிருமஞ்சனம், மகாதரிசனம், கொடியிறக்குதல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனைகள் ஆகியவையுடன் விழா பூர்த்தியடைகிறது.
தேர் திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் இரா.சங்கரசுந்தரேஸ்வரன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.