உள்ளூர் செய்திகள்

காசிலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்த போது எடுத்த படம்.

புளியம்பட்டி அருகே அரசு பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2022-06-30 09:20 GMT   |   Update On 2022-06-30 09:20 GMT
  • பள்ளி நேரத்திற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும், ஸ்மார்ட் டிவி வசதி வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.
  • பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது குறித்தும் கேட்டறிந்தார்.

ஓட்டப்பிடாரம்:

புளியம்பட்டி அருகே உள்ள காசிலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்களை ஆய்வு செய்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது குறித்தும் கேட்டறிந்தார்.

ஆசிரியர்களிடம் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அப்போது பள்ளி மாணவ- மாணவர்களிடம் தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு திட்டம் குறித்தும் எதிர்காலத்தில் 12-ம் வகுப்பு முடித்த பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்க வேண்டும்.

ஆரம்ப கல்வி முதல் பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு வரை தமிழ் வழி கல்வியிலேயே பயில்பவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு குறித்தும் மாணவர்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ எடுத்துரைத்தார். பின்னர் பள்ளி நேரத்திற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும், ஸ்மார்ட் டிவி வசதி வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்தனர். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன் என உறுதியளித்தார்.

அப்போது உதவி தலைமை ஆசிரியர் கிரிஜா சரஸ்வதி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News