உள்ளூர் செய்திகள்

பள்ளியில் இருந்து மாயமான மாணவி சென்னையில் மீட்பு

Published On 2022-11-30 07:55 GMT   |   Update On 2022-11-30 07:55 GMT
  • தினந்தோறும் வீட்டில் இருந்து ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார்.
  • தன்னுடைய தாய் வீட்டு வேலை செய்ய சொல்லியதாக கூறியுள்ளார்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரி ஜின்னா தெருவை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 50).

இவர் மலேசியாவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செளவுதா பேகம் (வயது 40).இவருடைய மகள் ஹாரிஸா (வயது 13).

இவர் ராஜகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினந்தோறும் வீட்டில் இருந்து ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார்.

இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவி ஹாரிஸா வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய தாயார் மகள் வீட்டிற்கு வரவில்லை என்று பள்ளிக்கு தேடி வந்துள்ளார்.

அப்பொழுது ஹாரிஸா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்களும், பெற்றோர்களும், ஊர் மக்களும் பள்ளி முன்பு கூட்டமாக குவிந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாபநாசம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

சம்பவ இடத்திற்கு பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப் - இன்ஸ்பெக்டர்கள் இளமாறன், குமார், மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து சோதனை செய்த போது அவர் பள்ளி முடிந்து பள்ளியிலிருந்து நடந்து சென்று ராஜகிரி பகுதியில் பஸ்சில் ஏறி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

நேற்று இரவு பள்ளி மாணவி ஹாரிஸா கும்பகோணத்தில் பஸ்சில் ஏறி சென்னைக்கு சென்று ள்ளார். அங்கு கீழ்பாக்கத்தில் இறங்கியுள்ளார்.

அங்கு தனியாக வந்து கொண்டிருந்த பள்ளி மாணவி ஹாரிஸாவை பார்த்த சென்னை பெருநகர காவல் ரோந்து பணி போலீசார்கள் அந்த மாணவியை மீட்டு விசாரணை செய்ததில் தன்னுடைய தாயார் வீட்டு வேலை செய்ய சொல்லி கூறியதாக கூறியுள்ளார்.

அதனால் கோபத்தில் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்னைக்கு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார். உடனே குரோம்பே ட்டையில் உள்ளஅவரது சித்தப்பாவை வரவழைத்து அவரிடம் சென்னை கீழ்ப்பாக்கம் போலீசார்மாணவி ஹாரி சாவை ஒப்படைத்தனர்.

பின்னர் மகள் கிடைத்த வுடன் ராஜகிரியிலிருந்து அவருடைய பெற்றோர்கள், உறவினர்கள் ஹாரிஸாவை அழைத்து வரசென்னைக்கு விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News