உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு பங்களாவில் குடியேறுகிறார்

Published On 2023-03-21 14:59 IST   |   Update On 2023-03-21 15:41:00 IST
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடையாறில் உள்ள அரசு பங்களாவில் குடியேற முடிவு செய்துள்ளார்.
  • 'குறிஞ்சி' பங்களா வேகமாக புதுப்பிக்கப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதி சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

தந்தை-மகன் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

முதலமைச்சரின் முகாம் அலுவலகம் இங்கு உள்ளதால் முதலமைச்சரை பார்க்க அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தினமும் வந்து செல்வது வழக்கம்.

இப்போது அமைச்சர் உதயநிதியை பார்க்கவும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் வருவதால் இட நெருக்கடி ஏற்படுகிறது.

இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடையாறில் உள்ள அரசு பங்களாவில் குடியேற முடிவு செய்துள்ளார்.

அவருக்காக கிரீன்வேஸ் சாலையில் உள்ள 'குறிஞ்சி' என்ற அரசு பங்களா வேகமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த பங்களாவில் இதுவரை சபாநாயகர் அப்பாவு வசித்து வந்தார். கடந்த ஜனவரியில் அவர் அருகில் உள்ள 'மலரகம்' என்ற பங்களாவுக்கு மாறினார்.

இப்போது 'குறிஞ்சி' பங்களா வேகமாக புதுப்பிக்கப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் அமைச்சர் உதயநிதி அரசு பங்களாவுக்கு வந்து குடியேறுகிறார்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது இந்த பங்களாவில் தான் குடியிருந்தார்.

Tags:    

Similar News