உள்ளூர் செய்திகள்

குடமுழுக்கு ஆயத்த பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு செய்தார்.

ராஜகோபாலசாமி கோவிலில் குடமுழுக்கு ஆயத்த பணிகளை அமைச்சர் ஆய்வு

Published On 2023-11-10 09:56 GMT   |   Update On 2023-11-10 09:56 GMT
  • 16 கால் மண்டபம், கோவில் ராஜகோபுரம் ஆகியவற்றை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பார்வையிட்டார்.
  • கோவிலின் வரைபடத்தை வைத்து மின்விளக்குகள் பொருத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார்.

மன்னார்குடி:

மன்னார்குடி ராஜகோபா லசாமி கோவிலில் குடமு ழுக்கு திருப்பணி ஆயத்த பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது நுழைவு வாயிலில் உள்ள 16 கால் மண்டபம், கோவில் ராஜகோபுரம், மற்றும் செங்க மலத்தாயார், ராஜ கோபாலசாமி சன்ன திகள் ஆகியவற்றை பார்வையி ட்டார்.

தொடர்ந்து, கோவிலின் வரைபடத்தை வைத்து கோவிலில் மின்விளக்குகள் பொருத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, கோவில் நிர்வாக அலுவலர் மாதவன், இந்து சமய அறநிலையத்துறை மின்சார பிரிவு செயற்பொறியாளர் வெங்கட சுப்பிரமணியன், தொல்லியல் துறை சேகர், மாவட்ட வன அலுவலர் ஸ்ரீதர், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன், தி.மு.க. நகர செயலாளர் வீரா கணேசன், ஒன்றிய செயலாளர் முத்துவேல் சிவா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியசாமி, பைங்காநாடு இளையராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News