உள்ளூர் செய்திகள்

ஆவுடையார்குளம் உபரிநீர் வடிகால் ஓடையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி, அருகில் கலெக்டர் செந்தில்ராஜ், ஆர்.டி.ஓ. புகாரி, தி.மு.க. மாநில வர்த்தகஅணி இணை செயலாளர் உமரிசங்கர், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், கமிஷனர் வேலவன் உள்ளனர். 

திருச்செந்தூர் நகராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

Published On 2023-05-25 08:53 GMT   |   Update On 2023-05-25 08:53 GMT
  • திருச்செந்தூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் ரூ. 4 கோடி மதிப்பில் 148 கடைகள் கட்டப்பட்டு வருகிறது.
  • தொடர்ந்து ஆவுடையார்குளம் உபரிநீர் வடிகால் ஓடையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடை பெற்று வருகிறது. அந்தப் பணிகளை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

திருச்செந்தூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் ரூ. 4 கோடி மதிப்பில் 148 கடைகள் கட்டப்பட்டு வருகிறது. அதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆவுடை யார்குளம் உபரிநீர் வடிகால் ஓடையை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், ஆர்.டி.ஓ. புகாரி, தி.மு.க. மாநில வர்த்தகஅணி இணை செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், கமிஷனர் வேலவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News