உள்ளூர் செய்திகள்
பால் வியாபாரிகள், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
சங்ககிரியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- வளை யச்செட்டிபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பால் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி தர வேண்டும்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வளை யச்செட்டிபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில், பால் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி தர வேண்டும். ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை பாதுகாத்திட வேண்டும். பால் உற்பத்தி யாளர் சங்கத்தின் பணியா ளர்களுக்கு, பணி பாது காப்பு வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.