உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2022-12-27 14:29 IST   |   Update On 2022-12-27 14:29:00 IST
  • புலிக்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்ராஜ் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
  • காலை வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கடையில் இருந்தார்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த புலிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்ராஜ். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கடையில் இருந்தார்.

பின்னர் மதியம் வீட்டிற்கு சென்றபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கிராம் தங்கம், வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News