உள்ளூர் செய்திகள்

ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பரிசு வழங்கினார். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஓராண்டில் 3,067 பேருக்கு மருத்துவ சிகிச்சை: கலெக்டர் தகவல்

Published On 2022-09-30 06:11 GMT   |   Update On 2022-09-30 06:11 GMT
  • மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
  • தரமான சிகிச்சை வழங்க ப்படுவதை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் ஆண்டு விழா மற்றும் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திடத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாக 3,067 நபர்களுக்கு ரூ.1,98,31,997 மதிப்பீட்டில் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தின்கீழ் பல்வேறு அறுவை சிகிச்சைகள் வாயிலாக குணமடைந்த 5 நபர்களுக்கு சிகிச்சை குறித்தும் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்து, பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 5 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய இரண்டு திட்ட ஒருங்கிணை ப்பாளர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கி, தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டது. மேலும், இத்திட்ட த்தின்கீழ் பயன்பெற அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அல்லாதோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் காப்பீட்டுத்திட்ட மையத்தில் பதிவு செய்து, மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற்று பயன்பெறலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்படும் 22 அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்க ப்படுவதை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட தனி யார் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள தொ கையில் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மேலும், மருத்துவமனைகளில் காப்பீடு குறித்த விபரங்கள் அடங்கிய தகவல் பலகையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக அவ்வப்போது, இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் மரு.பாலச்சந்தர், தேசிய சுகாதார குழும ஒருங்கிணைப்பாளர் மரு.செந்தில், திட்ட ஒருங்கிணைப்பாளர்சோ.சாமிநாதன், மாவட்ட கருவூல அலுவலர் திரு.இளங்கோ பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News