உள்ளூர் செய்திகள்

பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

கும்பகோணம் கோட்ட போக்குவரத்து பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

Published On 2023-04-30 09:30 GMT   |   Update On 2023-04-30 09:30 GMT
  • உடல் எடை கண்டறிதல், சா்க்கரை அளவு கண்டறிதல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன.
  • தேவையான ஆலோசனைகளும், மேல்சிகிச்சைக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்:

கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கழக நிா்வாகம், துளசி பாா்மசி இந்தியா நிறுவனம் சாா்பில் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை மேலாண் இயக்குநா் எஸ்.எஸ்.ராஜ்மோகன் தொடக்கி வைத்தாா்.

இதில் கண் பரிசோதனை, செவித்திறன் தொடா்பான குறைபாடுகளைக் கண்டறிதல், ரத்த அழுத்த பரிசோதனை, உடல் எடை கண்டறிதல், சா்க்கரை அளவு கண்டறிதல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும், தேவையான ஆலோசனைகளும், மேல் சிகிச்சைக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய உயரிய சிகிச்சை வழங்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முகாமில் ஓட்டுநா், நடத்துநா்கள், தொழில் நுட்பப் பணியாளா்கள், அலுவலக பணியாளா்கள், அலுவலா்கள் உள்பட 250 போ் கலந்து கொண்டனா். முகாமில் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா்கள் ஜே. ஜெபராஜ் நவமணி, கே. முகம்மது நாசா், முதுநிலை துணை மேலாளா் கே.டி.கோவிந்தராஜன், துணை மேலாளா் எஸ்.ராஜா, உதவி மேலாளர்கள் செந்தில்குமார், ரமேஷ், நாகமுத்து, ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News