உள்ளூர் செய்திகள்

கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவி வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் உற்பத்தி பாதிப்பு -பட்டாசு வெடிப்பதை தவிர்த்த மக்கள்

Published On 2022-10-25 15:06 IST   |   Update On 2022-10-25 15:06:00 IST
  • கிராமங்களில், ஆடு, மாடுகளுக்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது.
  • கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பதாக தெரிவித்தனர்.

ஓசூர்,

ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால், மாவட்டத்தில் சில கிராமங்களில் தீபாவளி கொண்டாடப்படவில்லை.

ராயக்கோட்டை அடுத்த முத்தம்பட்டி, எடம்பட்டி, தின்னுார், தொட்ட திம்மனஹள்ளி சுற்று வட்டார கிராமங்களில், ஆடு, மாடுகளுக்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது.

இதனால் கால்நடைகள் முடங்கி, விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. கறவை மாடுகளை இந்நோய் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் பால் உற்பத்தி முற்றிலும் குறைந்து வருகிறது. இதனால் கிராம மக்கள் தங்க ளுக்குள் கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்த்த னர். பட்டாசு புகையால் மாடுகளுக்கு அம்மை நோய் பாதிப்பு அதிகமாகும் எனக்கூறப்படுவதால் கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பதாக தெரிவித்தனர்.

கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கி வருவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.ஆனால் போதுமான மருந்துகள் இல்லை என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதனால் நாட்டு வைத்தியம் மூலம் கால்நடைகளை காப்பாற்ற விவசாயிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News