உள்ளூர் செய்திகள்

மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு செய்த காட்சி.

தூத்துக்குடி உணர்வு பூங்காவில் குழந்தைகளுக்கு பரிசளித்த மேயர்

Published On 2023-06-02 08:42 GMT   |   Update On 2023-06-02 08:42 GMT
  • மேயர் ஜெகன் பெரியசாமி பூங்காவிற்கு வந்திருந்த குழந்தைகளை பார்த்து பேசி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
  • புதிய தார் சாலை பணிகள் குறித்து மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி சிவந்தகுளம் பள்ளி அருகில் உள்ள உணர்வு பூங்கா, குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

இந்நிலையில் அங்கு மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பூங்காவிற்கு வந்திருந்த குழந்தைகளை பார்த்து அவர்களுடன் பேசி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாமன்ற உறுப்பினர் பாப்பாத்திஅம்மாள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை அமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன் ஜாஸ்பர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவிந்திரன், சமூக ஆர்வலர் ஐசக் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News