உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு நடைபெற்றபோது எடுத்தபடம்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணித தேசிய கருத்தரங்கு

Published On 2023-01-20 09:23 GMT   |   Update On 2023-01-20 09:23 GMT
  • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார்.
  • கருத்தரங்கில் 32 ஆய்வு மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதத் துறை சார்பில் ' இன்றைய நடைமுறை வாழ்வில் இயற் கணிதம் மற்றும் பகுப்பாய்வு கணிதம்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்த ரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, அன்றாட வாழ்வில் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் குறித்து பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியர் ஜோசப் கென்னடி கலந்து கொண்டு, எண் அமைப்பு மற்றும் புலங்கள் என்ற தலைப்பில் பேசினார். இதில் ஆய்வு மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார்.

கருத்தரங்கில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பரணிதர் கலந்து கொண்டு, குவிந்த தொடர்கள் குறித்தும், கணிதத்துறை பகுப்பாய்வு செய்து கற்பது குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் 32 ஆய்வு மாணவர்கள், தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

இந்த கட்டுரைகள் ஐ.எஸ். பி.என். எண் கொண்ட புத்தகமாக வெளியிடப்பட்டது. கருத்த ரங்கின் பொறுப்பாளராக கணிதத் துறை பேராசிரியை செண்பகா தேவி செயல் பட்டார். இதில் 19 கல்லூரி களை சேர்ந்த பேராசிரி யர்கள், ஆய்வு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கை கணிதத்துறை தலைவர் வழிகாட்டுதல்படி, துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News