உள்ளூர் செய்திகள்

கும்பகோணம் பகுதி கோவில்களில் மாசிமக விழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2023-02-24 09:35 GMT   |   Update On 2023-02-24 09:35 GMT
  • மகாமக குளக்கரையில் 12 சிவாலய மூர்த்திகள் எழுந்தருள மாசிமக தீர்த்தவாரி விழா நடைபெற உள்ளது.
  • தினசரி காலையில் பல்லக்கிலும், மாலையில் சந்திரபிரபை, சேஷம், கருடன் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும்.

பட்டீஸ்வரம்:

கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகத் திருகுளத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி பகல் 12 மணிக்கு மேல் தீர்த்தவாரி விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தீர்த்தவாரி கண்டருளும் கோவில்களான மங்களாம்பிகை சமேதஆதி கும்பேஸ்வரர்,

சோமசுந்தரி சமேதவி யாழசோமேஸ்வரர், அமிர்தவல்லி சமேத அபிமுகேஸ்வரர், விசாலாட்சி சமேதகாசிவிஸ்வநாதர்,

ஞானாம்பிகா சமேதகாளஸ்திஸ்வரர், சௌந்தரநாயகி சமேத கவுதமேஸ்வரர் ஆகிய சிவாலயங்களில் இப்பெருவிழா வின் தொடக்க பூஜையான அனுக்ஞை, விக்னேஸ்வரர்,

வாஸ்து சாந்தி என சிறப்பு பரிகார பூஜைகள் இன்று இரவு செய்யப்பட்டு நாளை

(சனிக்கிழமை) காலை கொடி யேற்றத்துடன் மாசிமக தீர்த்தவாரி பெருவிழா தொடங்க உள்ளது.

அதனை தொடர்ந்து இவ்வாலயங்களில் தினசரி காலையில் பல்லாக்கிலும், மாலையில் சுவாமி, அம்பாள் சூரியபிரபை ,

சந்திரபிரபை, சேஷம், கமலம், பூதம், சிம்மம், யானை, அன்னப்பட்சி, நந்தி , காமதேனு, குதிரை ,கிளி , ரிசபம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா திருகாட்சியும் , ஐந்தாம் திருநாளன்று ஓலைச்சப்பரம், ஏழாம் நாளன்று திருக்கல்யாணம், ஒன்பதாம் திருநாளன்று திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது .

இதேப்போல் குடந்தை கீழ்கோட்டம் ஸ்ரீபிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரர் , சோமகமலாம்பாள் சமேத பாணபுரீஸ்வரர் , ஆதிகம்பட்ட விஸ்வநாதர், காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், மற்றும் கொட்டையூர் ஸ்ரீபந்தாடுநாயகி சமேத கோடிஸ்வரர், சாக்கோட்டை அமிர்தவல்லி சமேத அமிர்தகலசநாதர் ஆகிய கோயில்களில் இருந்து வரும் 6-ந் தேதி பகல் 12 மணிக்கு மேல் மகாமகத் திருக்குளக் கரையில் 12-சிவாலய மூர்த்திகள் எழுந்தருள மாசிமகத் தீர்த்தவாரி விழாவும்நடைபெற உள்ளது.

கும்பகோணத்தில் உள்ள வைணவ ஆலயங்களில் மாசிமகப் பெருவிழா, திருத்தேரோட்டம், தெப்போத்ஸவம் சுதர்சனவல்லி, விஜயவல்லி சமேதஸ்ரீ சக்கரபாணி , அம்புஜவல்லி சமேதஸ்ரீஆதி வராஹ பெருமாள், ருக்மணி,

சத்யபாமா, செங்கமலத் தாயார் சமேத இராஜகோபாலசுவாமி (பெரிய கடைத்தெரு) தோப்புத்தெரு இராஜகோபாலசுவாமி (இந்த கோவிலில் மட்டும் கொடியேற்றம் கிடையாது) ஆகிய கோயில்களில் வரும் 26-ந்தேதி காலை கொடியேற்றமும் அதனை தொடர்ந்து மாசிமகப் பெருவிழாவையெட்டி தினசரி காலையில் பல்லக்கிலும், மாலையில் சந்திரபிரபை, சேஷம், கருடன், அனுமந், யானை, புன்னைமரம்,குதிரை ஆகிய வாகனங்களில் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருள திருவீதியுலா திருகாட்சியும் நடைபெறும்.

மாசி மகத்தன்று சக்கரபாணி திருகோவிலில் காலையில் திருத்தேரோட்டமும், ராஜகோபாலசுவாமி, ஆதிவராஹப்பெருமாள் ஆலயங்களில் ரதாரோஹணமும் அதனை தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

மாசி மகத்ததன்று மாலை சார்ங்கபாணி திருக்கோயில் குளமான பொற்றாமரை திருக்குளத்தில் உற்சவ நாச்சியார்களுடன் ஆராவமுதப் பெருமாள் எழுந்தருள தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.

இவ்விழாக்களின் சிறப்பு ஏற்பாடுகளை கும்பகோணம் இந்து சமய அறநிலைய துறை சுவாமிமலை துணை ஆணையர் உமாதேவி , மற்றும் கும்பகோணம் உதவி ஆணையர் ராணி (கூ.பொ) கண்காணிப்பாளர்கள் சுதா ,

பழனிவேல் ஆய்வாளர்கள் தனலட்சுமி , கோகிலதேவி மற்றும் செயல் அலுவலர்கள் கிருஷ்ணகுமார், சிவசங்கரி, கணேஷ்குமார், மற்றும் அந்தந்த கோயில்களின் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News