உள்ளூர் செய்திகள்

அவினாசி கோவிலில் மாசி அமாவாசை வழிபாடு

Published On 2023-02-21 10:58 IST   |   Update On 2023-02-21 10:58:00 IST
  • திரளான பக்தர்கள் காலை முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்தனர்.
  • சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அவினாசி :

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் காசிக்கு நிகரான வரலாற்று சிறப்புவாய்ந்த அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. மாசி அமாவாசை தினத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் காலை முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்தனர்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் அவினாசி ஆகாசராயர் கோவில், சுந்தரமூர்த்தி நாயனார் கோவில், வீரஆஞ்சநேயர் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில், காரணப்பெருமாள் கோவில, கருவலூர் மாரியம்மன் கோவில், பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News