என் மலர்
நீங்கள் தேடியது "மாசி அமாவாசை வழிபாடு"
- ஒரு ஆண்டில் 96 தர்ப்பணங்கள் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
- மாலையில் குல தெய்வத்தை வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபடுவது மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) வருவது மாசி மாத அமாவாசை. மாதந்தோறும் அமாவாசை திதி வந்தாலும் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை திதி கூடுதல் சிறப்பு பெறுகிறது.
தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை ஆகியன மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதே போல் மாசி மாத அமாவாசையும் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஒரு வருடத்தில் 12 அமாவாசைகள் வருகிறது. மேலும், அமாவாசை திதியின் அதிபதி நம் முன்னோர்கள்தான். இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு சிறப்பு தூபம் காட்டி தியானம் மற்றும் அன்னதானம் செய்வது குடும்பத்திற்கு நல்லது.
ஒரு ஆண்டில் 96 தர்ப்பணங்கள் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதன்படி மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, கிரகண காலங்கள், திதி, புரட்டாசி மகாளய பட்சத்தின் 15 நாட்கள் என 96 தர்ப்பணங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
அதில் மாசியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பான பலன்களை தரும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நாளில் அதிகாலையில் எழுந்து, நீராடி, முன்னோர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஆறு, குளம், கடலில் புனித நீராடுவது மிகவும் புண்ணியமானதாகும். முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மாலையில் குல தெய்வத்தை வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
மாலையில் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி, குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் நமது முன்னோர்களின் மனதை குளிர்வித்து அவர்களின் ஆசியை பெறுவதுடன் குலதெய்வத்தின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும்.
அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதன் மூலம் நாம் செய்த பாவம் மட்டுமின்றி, பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் செய்த பாவங்களும் தீர்ந்து, அவர்களின் ஆன்மா நற்கதி அடையும். முன்னோர் வழிபட்டை மேற்கொள்வதால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். பிரச்சினைகள், திருமண தடை போன்ற தடைகள், தோஷங்கள் நீங்கும். குலம் செழிக்கும். குழந்தை பேறு உண்டாகும். மாசி அமாவாசையில் நதிகளின் கரையில் தெய்வங்களும் வசிக்கின்றனர். 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீராடுவது அனைத்து பாவங்களையும் போக்கும் என்கின்றனர் ஆன்மீகபெரியவர்கள். மாசி அமாவாசைக்கு நம் முன்னோர்களை வழிபாடு செய்தால் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படுகிறது.
இந்த ஆண்டு மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் அன்று தர்ப்பணம் கொடுப்பது பித்ருக்களுக்கு அளவற்ற மன மகிழ்ச்சியை தருவதோடு தானதர்மம், உணவு, தண்ணீர் ஆகியவற்றை தானம் செய்தால் பல ஆயிரம் ஆண்டுகள் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்த பலன் கிடைக்கும்.
- திரளான பக்தர்கள் காலை முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்தனர்.
- சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் காசிக்கு நிகரான வரலாற்று சிறப்புவாய்ந்த அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. மாசி அமாவாசை தினத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் காலை முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்தனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் அவினாசி ஆகாசராயர் கோவில், சுந்தரமூர்த்தி நாயனார் கோவில், வீரஆஞ்சநேயர் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில், காரணப்பெருமாள் கோவில, கருவலூர் மாரியம்மன் கோவில், பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.






