உள்ளூர் செய்திகள்

ஆலமரத்தில் தெரிந்த மாரியம்மன் உருவம்.

செம்பட்டி அருகே ஆலமரத்தில் தெரிந்த மாரியம்மன் உருவம் பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபாடு

Published On 2022-08-20 05:39 GMT   |   Update On 2022-08-20 05:39 GMT
  • கோவில் அருகே உள்ள ஆலமரத்தில் திடீரென மாரியம்மன் உருவம் தெரிந்து உள்ளது.
  • இந்த பகுதி கிராம பெண் பக்தர்கள், ஆல மரத்தில் உள்ள மாரியம்மன் உருவத்திற்கு, குங்குமம் மற்றும் விபூதி, பூ வைத்து வழிபட்டு வருகின்றனர்.

செம்பட்டி:

செம்பட்டி அருகே பாளையங்கோட்டை மெயின் ரோடு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெற்று வருகிறது.

இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து மாரியம்மனை வணங்கி வருகின்றனர். கோவில் அருகே உள்ள ஆலமரத்தில் திடீரென மாரியம்மன் உருவம் தெரிந்து உள்ளது. அதனை பார்த்த இந்த பகுதி கிராம பெண் பக்தர்கள், ஆல மரத்தில் உள்ள மாரியம்மன் உருவத்திற்கு, குங்குமம் மற்றும் விபூதி, பூ வைத்து வழிபட்டு வருகின்றனர்.

நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாளையங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண் பக்தர்கள் அங்கு சென்று, ஆலமரத்தில் தெரியும் மாரியம்மன் உருவத்திற்கு குங்குமம் பத்தி, சூடம் ஏற்றி, பூ மற்றும் வேப்பம் இலை வைத்து வழிபட்டனர். பெண்கள் அந்த ஆல மரத்தை சுற்றி வந்து, சாமியாடினர். இதை அறிந்த ஏராளமான பக்தர்கள் அங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

Tags:    

Similar News