உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட கவினேசன் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

அனுமதியின்றி மணல் கடத்திய ஒருவர் கைது; 2 வாகனங்கள் பறிமுதல்

Published On 2023-07-11 10:00 GMT   |   Update On 2023-07-11 10:00 GMT
  • 2 சரக்கு வாகனத்தில் ஆற்று மணல் கடத்தி வந்ததை தடுத்து நிறுத்தினர்.
  • தப்பியோடிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வேலி அக்னி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவதாக ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பெயரில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் மேற்பார்வையில் தனிப்படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமாரவேல், தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருவோணம் மேட்டுப்பட்டி கிராம பகுதியில் 2 சரக்கு வாகனத்தில் ஆற்று மணல் கடத்தி வந்ததை தடுத்து நிறுத்தினர்.

போலீசை பார்த்தும் இரண்டு வாகனத்தில் வந்த மூவரில் 2 பேர் தப்பி ஓடினர்.

ஒருவரை மட்டும் மடக்கி பிடித்த தனிப்படை போலீசார் திருவோணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் நெய்வேலி வடபாதி ஆவனா ண்டி கொள்ளையைச் சேர்ந்த கவினேசன் (22) என்பவர் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து இரவு நேரங்களில் அக்னி ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து

இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கவிநேசனை சிறையில் அடைத்தனர் . மேலும் தப்பி ஓடிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News