உள்ளூர் செய்திகள்

பயிற்சிக்கு வந்திருந்த மாணவர்களில் ஒரு பகுதியினர்

மாமல்லபுரம் அருகே "பிக்கோ" செயற்கைக்கோள்களை செலுத்த மாணவர்களுக்கு பயிற்சி

Published On 2023-02-18 23:00 IST   |   Update On 2023-02-18 23:00:00 IST
  • தமிழ்நாடு, குஜராத், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநில மாணவர்கள் பங்கேற்றனர்
  • "பிக்கோ" எனப்படும் சிறிய வகை செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் ராக்கெட் பற்றிய விழிப்புணர்வு அறிவியல் ஆர்வத்திற்கான 8 கி.மீ தூரம் செல்லும் "பிக்கோ" எனப்படும் சிறிய வகை செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதில் தமிழ்நாடு, குஜராத், பெங்களூர், ஜெய்ப்பூர், கேரளா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநில மாணவர்கள் பங்கேற்றனர்.

இதற்கான துவக்க விழா, கருத்தரங்கம், பயிற்சி மற்றும் பாதுகாப்பு பற்றிய அறிவுரைகள் இன்று மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலை திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இதில் ஸ்பேஸ் சோன் இந்தியா, மார்ட்டின் சாரிட்டபுள் டிரஸ்ட் நிர்வாகிகள், அணுசக்தி துறையினர், காவல்துறை அதிகாரிகள், இராணுவத்தினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News