உள்ளூர் செய்திகள்

மல்லிநாயனப்பள்ளி கிராமத்தில் ரூ.5.20 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி -அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-11-28 15:08 IST   |   Update On 2022-11-28 15:08:00 IST
  • சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
  • சிமெண்ட் சாலை அமைக்க அடுத்த முறை நிதி ஒதுக்கப்படும் என்றார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒன்றியம் மல்லிநாயனப்பள்ளி கிராமத்தில், 2022–-2023-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் இருந்து 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்கான பணியை கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அப்போது மக்கள் எம்.எல்.ஏ.,விடம், ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் ஆழ்துளைக் கிணறு மூழ்கி கிராமத்திற்கு சீராக குடிநீர் வினியோகம் இல்லை. ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் கிராமத்திற்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளது. எனவே சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு பதில் அளித்த எம்.எல்.ஏ., விரைவில் குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாலையை உயர்த்தி சிமெண்ட் சாலை அமைக்க அடுத்த முறை நிதி ஒதுக்கப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, பஞ்சாயத்து துணைத் தலைவர் லட்சுமி மோகன், ஒன்றிய துணை செயலாளர்கள் குமரேசன், சரவணன், கவுன்சிலர்கள் மகேந்திரன், சங்கீதா சரவணன், முன்னாள் கிளை செயலாளர் வீரபத்திரன், ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடேசன், கிளை செயலாளர்கள் சாம்ராஜ், செல்வம் காட்டி நாயனப்பள்ளி துணைத் தலைவர் நாராயணகுமார், ஒப்பந்ததாரர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News