உள்ளூர் செய்திகள்

ஓசூர் முத்து மாரியம்மன் கோவிலில் உலக நலனுக்காக மகாசண்டி யாகம்

Published On 2023-08-02 15:12 IST   |   Update On 2023-08-02 15:12:00 IST
  • உலக நலனுக்காக மகா சண்டி யாகம் 2 நாட்கள் நடைபெற்றது.
  • விழாவையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே சர்வீஸ் ரோடு, மாருதி நகரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, உலக நலனுக்காக மகா சண்டி யாகம் 2 நாட்கள் நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை, கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, மற்றும் சிறப்பு பூஜைகளுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. நேற்று (செவ்வாய்கிழமை) சிகர நிகழ்ச்சியாக மகா சண்டி யாகம் நடந்தது

இதையொட்டி, கோவில் அருகே பெரிய அளவிலான யாக குண்டம் அமைக்கப்பட்டு அதில் நெய் ஊற்றியும், பூஜை பொருட்கள் மற்றும் மங்கள திரவியங்கள் சமர்ப்பித்து சண்டி யாகம் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை வெங்கட்ராமன் சிவாச்சாரியார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் யாகத்தை நடத்தினர். தொடர்ந்து கலசாபிஷேகம், சாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேலும் விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில்,பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News