உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் கருமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

Published On 2023-02-12 15:36 IST   |   Update On 2023-02-12 15:36:00 IST
  • கருமாரியம்மன் பூஜைகள், கணபதி ஹோமம், பிராதான ஹோமங்கள், நடைபெற்றது.
  • புனித கலசத்திற்கு நீரை ஊற்றி அந்த புனித நீரை கீழே உள்ள பக்தர்களுக்கு தெளித்தனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில் புதிதாக ஸ்ரீ கருமாரியம்மன் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகம் கடந்த 8 ஆம் தேதி புதன் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி இன்று இரவு கங்கா பிரகதி பூஜை, கோமாதா பூஜை, கணபதி பிரார்த்தனை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், மகா சங்கபம் பூஜை, கணபதி பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் இரண்டாம் நாளான 9 ஆம் தேதி வியாழன் கிழமை துஜாரோ கனம் பூஜை, சுவாமிகள் மண்டல பூஜைகள், அம்மன் பிரதிஷ்டை, நவகிரக ஆராதனை, மகா வைத்தியம் பூஜை, பஞ்சாமிர்த பூஜை, கலச பூஜைகள் போன்ற பூஜைகள் நடைபெற்றது.

கடைசி நாளான 10-ந்தேதி காலை 5 மணி முதல் 9 மணி வரை புராணபதிஷ்டத்தை, கணபதி பிரார்த்தனை, கலச அர்ச்சனை, ஸ்ரீ கருமாரியம்மன் பூஜைகள், கணபதி ஹோமம், பிராதான ஹோமங்கள், வியாதி ஹோமம்கள் நடைபெற்றது.

பின்னர் ஆனந்த களிப்பு நடனம் ஆடி கோவிலின் மேல் உள்ள புனித கலசத்திற்கு நீரை ஊற்றி அந்த புனித நீரை கீழே உள்ள பக்தர்களுக்கு தெளித்தனர்.

அப்போது மூன்று கருடன்கள் கோவின் மேலே வந்து வட்டமிட்டது அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டுனர்.

பின்னர் ஶ்ரீ கருமாரி யம்மனுக்கு சிறப்பு அபிஷே கங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளி த்தார்.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில் வேப்பனப்பள்ளி நாச்சிகுப்பம், தீர்த்தம், நேரலகிரி, மாணவரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்றனர். இந்த விழாவில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

Tags:    

Similar News