உள்ளூர் செய்திகள்

மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரி மையத்தில் தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம்.

நில அளவையர், வரைவாளர் பணிக்கான எழுத்து தேர்வு

Published On 2022-11-06 08:06 GMT   |   Update On 2022-11-06 08:06 GMT
  • நில அளவையர், வரைவாளர் பணிக்கான எழுத்து தேர்வு மதுரையில் இன்று நடந்தது.
  • இதற்காக 47,623 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

மதுரை

தமிழகத்தில் 789 நில அளவையர், 236 வரைவாளர் உள்பட 1089 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்காக 47,623 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு இன்று மாநிலம் முழுவதும் எழுத்து தேர்வு நடந்தது.

மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரி, நரிமேடு நாய்ஸ் மெட்ரிகு லேஷன் மேல்நிலைப்பள்ளி, நாராயணபுரம் எஸ்.இ.வி மேல்நிலைப்பள்ளி, விஸ்வநாத புரம் பாலமந்திரம் மேல்நிலைப்பள்ளி, சின்ன சொக்கிகுளம் லேடி டோக் கல்லூரி, கோரிப்பாளையம் மீனாட்சி அரசினர் கல்லூரி, திருப்பாலை யாதவா பெண்கள் மற்றும் ஆண்கள் கல்லூரி, புதூர் சி.எஸ்.ஐ. கல்லூரி, நோபிலி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, அல் அமீன் மேல்நிலைப்பள்ளி, கே.கே. நகர் அருள்மலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் இன்று எழுத்து தேர்வு நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொழில்நுட்பம் சாராத 'மல்டி டாஸ்கிங்' பணிகளுக்கான ஸ்டாப் செலக்சன் கமிஷன் 2-ம் நிலை தேர்வு நடந்தது. இதில் 465 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

Tags:    

Similar News