உள்ளூர் செய்திகள்

இறைச்சியில் விஷம் கலந்து வைத்து 50 நாய்களை கொன்றது யார்?

Published On 2023-03-14 13:12 IST   |   Update On 2023-03-14 13:12:00 IST
  • இறைச்சியில் விஷம் கலந்து வைத்து 50 நாய்களை கொன்றது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இறந்த நாய்களின் அருகில் உணவுப் பொட்டலங்கள் இருந்தது.

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள மம்பட்டி பட்டி, நரியம்பட்டி, வையத்தான், கோவில்பட்டி ஆகிய கிராமங்களில் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது இறந்த நாய்களின் அருகில் உணவுப் பொட்டலங்கள் இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நாய்களின் உடல்கள் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்யப்பட பின் நாய்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும்.

கிராமங்களில் விவசாயி கள் தங்கள் ஆடு, மாடுகளை பாதுகாக்க தோட்டங்களில் நாய்களை வளர்த்து வருகின்றனர். மேலும் வீடு களுக்கும் நாய்கள் பாதுகாப்பாக உள்ளன. அதன்படி மேற்கண்ட 4 கிராமங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நாய்களை வளர்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆங்காங்கே கோழி இறைச்சி கழிவுகளில் விஷம் கலந்து பல்வேறு இடங்களில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இதை சாப்பிட்ட 50 நாய்கள், ஒரு பூனை பரிதாபமாக இறந்துள்ளது.

நாய்களை விஷம்வைத்து கொன்ற நபர்கள் யார்? கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் நாய்களை விஷம்வைத்து கொன்றார் களா? நாய்களின் தொல்லை காரணமாக யாரேனும் இவ்வாறு செய்தார்களா? என்று போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நாய்களை விஷம் வைத்து கொன்றது யார்? எஎன்பதை கண்டறிய அந்த பகுதியில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வாயில்லா ஜீவன்களான நாய்களை விஷம் வைத்து கொன்றவர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News