உள்ளூர் செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-06-08 16:28 IST   |   Update On 2022-06-08 16:28:00 IST
  • மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
  • மோட்டார் சைக்கிளும் திருமங்கலம் மெயின் ரோட்டில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

மதுரை

திருமங்கலம் எஸ்.ஆர்.வி. நகர் காவேரி நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரசன்னா (24). மதுரை டோக் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (37).

பிரசன்னா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சுரேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் திருமங்கலம் மெயின் ரோட்டில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் பிரசன்னா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News