உள்ளூர் செய்திகள்

புத்தாண்டு கொண்டாடி விட்டு திரும்பிய வாலிபர் விபத்தில் பலி

Published On 2023-01-01 13:37 IST   |   Update On 2023-01-01 13:37:00 IST
  • புத்தாண்டு கொண்டாடி விட்டு திரும்பிய வாலிபர் விபத்தில் பலியானார்.
  • பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

திருமங்கலம்

திருமங்கலம் கீழபள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் மைதீன். இவரது மகன் முகமது முஷபர் கனி(23). நேற்று இவர் நண்பர்களுடன் திருமங்கலத்தை அடுத்துள்ள மறவன்குளத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட் டத்தில் பங்கேற்றார்.

கொண்டாடத்தை முடித்துவிட்டு நள்ளிரவு 2.30 மணியளவில் அவரது நண்பர் அலெக்ஸ் பாண்டியுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையம் அருகே மின்வாரிய பஸ்நிறுத்தம் அருகில் உள்ள வளைவில் வந்த போது நிலைதடுமாறியது. சாலையின் நடுவே உள்ள தடுப்புசுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் முகமது முஷபர் கனி சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த அலெக்ஸ்பாண்டியன் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அலெக்ஸ் பாண்டியை மீட்டு மதுரை அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த முகமது முஷபர் கனியின் உடலை மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

Similar News