உள்ளூர் செய்திகள்

மதுரையில் இருந்து காசிக்கு 18-ந் தேதி ஆன்மீக சுற்றுலா ெரயில்

Published On 2022-11-06 07:48 GMT   |   Update On 2022-11-06 07:48 GMT
  • மதுரையில் இருந்து காசிக்கு 18-ந் தேதி ஆன்மீக சுற்றுலா ெரயில் இயக்கப்படுகிறது.
  • பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ஆகியவை சேர்த்து குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 மதுரை

இந்தியாவின் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்களை தரிசிக்க, தென்னக ெரயில்வே பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மதுரையில் இருந்து காசிக்கு வருகிற 18-ந் தேதி சிறப்பு ெரயில் இயக்கப்பட உள்ளது. இது திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, விஜயவாடா வழியாக 19-ந் தேதி உ.பி மாநிலம் சித்திரக்கூடம் செல்லும்.

நவம்பர் 20-ந் தேதி சர்வ ஏகாதசி அன்று ராம்காட்டில் புனித நீராடி குப்த கோதாவரி குகை கோயில், காம்தகரி, சதி அனுசுயா கோவில்களை தரிசனம் செய்யலாம். 21-ந் தேதி பிரதோஷம் அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி ராமஜன்ம பூமி கோவில் தரிசனம். 22-ந் தேதி சிவராத்திரி அன்று காசி கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்களில் தரிசனம். 23-ந் தேதி சர்வ அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்கள் வழிபாடு முடிந்து விஷ்ணு பாத தரிசனம்.

24-ந் தேதி ஒடிசாவில் பூரி ஜெகநாதர் ஆலயம், கொனார்க் சூரியனார் கோவில் தரிசனம். 26-ந் தேதி ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோவில் 21 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம். 27-ம் தேதி சுற்றுலா ரயில் மதுரை வரும்.

பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ஆகியவை சேர்த்து குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரை- காசி சுற்றுலா ரயிலில் பயணம் செல்ல www.ularail.com இணைய தளத்தில் பதிவு செய்யலாம்" என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News