உள்ளூர் செய்திகள்

முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டு

Published On 2023-07-23 13:32 IST   |   Update On 2023-07-23 13:32:00 IST
  • முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டுபோனது.
  • கிராம மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் கோவில் சாலையில் உள்ள கிடாரிப்பட்டியில் வெள்ளிமலையாண்டி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பழமை வாய்ந்த 5 அடி உயர வெள்ளி வேல் பிரதிஷ்டை செய்து கிராம மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோவிலில் கட்டிட பராம ரிப்பு பணிகள் நடந்து வந்தன. இதன் காரணமாக வெள்ளிவேல் அங்குள்ள மண்டபத்தில் தகரத்தினால் மூடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப் பட்டு இருந்தது. இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பழமை வாய்ந்த வெள்ளி வேலை திருடிக் கொண்டு தப்பினர். இதனால் கோவில் நிர்வாகி கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மேலவளவு போலீசில் புகார் செய்யப் பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களின் கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். வெள்ளி வேல் திருட்டு தொடர்பாக மர்ம நபர்க ளை போலீசார் தேடி வருகின்றனர். வெள்ளி மலையாண்டி முருகன் கோவிலில் பாரம்பரியமிக்க வெள்ளி வேல் திருட்டு போய் இருப்பது கிராம மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News