உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2023-09-05 06:37 GMT   |   Update On 2023-09-05 06:37 GMT
  • சத்குரு பிறந்த நாளையொட்டி 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படுகிறது.
  • இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மதுரை

சத்குரு பிறந்த நாளையொட்டி நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக ஈஷாவால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 132 விவசாய நிலங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படுகிறது. நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் வகையிலும் காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் கடந்த 2020 ஆண்டில் இருந்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 2 லட்சத்திற்கும் அதிகமமான மரங்கள் நடப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 1.10 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 34 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி அருகே உள்ள பூசலபுரம் கிராத்தில் ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன், கிராம அலுவலர் ஜெயராணி ஆகியோர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News