மதுரை வடக்கு மண்டல அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சுகாதாரக்கேடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதுடன் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி யடைந்து வருகின்றனர்.
மதுரை
மதுரை மாநகராட்சியின் 2-வது (வடக்கு) மண்ட லத்திற்கு உட்பட்ட பகுதி களில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணிகளை மேற் கொள்ள ஒப்பந்த முறையில் நூற்றுக்கணக்கா னோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்யாமல் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு கீழ் பணிபுரிய மாநகராட்சி ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் தூய்மை பணி யாளர்கள் நிரந்தரம் செய்வ தற்கு எதிரான அரசாணை 152ஐ ரத்து செய்ய கோரியும், தினக்கூலி தூய்மை பணியாளர்களை யும், ஓட்டுனர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளாக ஓய்வு பெற்ற நிரந்தர பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்ப யன்களை முழுமையாக உடனே வழங்க வேண்டும், தினக்கூலி மற்றும் கிராமப் பஞ்சாயத்து தொகுப்பூதிய தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் , கனரக வாகன ஓட்டுனர்கள், அனி மேட்டர் பணியா ளர்களுக்கு தினச்சம்பளமாக கொசு மருந்து மற்றும் அபேட் மருந்து பணியாளர்களுக்கு, பாதாளச்சாக்கடை மற்றும் பிட்டர் கூலி பணியா ளர்களுக்கு அரசாணை 36(2D)-ன்படி ஊதியம் வழங்க வேண்டும்.
சுகாதாரம் மற்றும் பொறி யியல் பிரிவு ஒப்பந்த தொழிலாளர்களின் இ.பி.எப், குளறுபடிகளை சரி செய்து இ.பி.எப், பணத்தை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திட வேண்டும், ஓட்டுனர்க ளுக்கான சம்பளத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்து வந்தனர்.
அதன்படி நேற்று 500-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கரிசல் குளத்தில் உள்ள மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலு வலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தூய்மை பணியாளர்களின் கோரிக்கை தொடர்பாக நாளை மாநகராட்சியில் உயர்மட்ட அதிகாரிகளின் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் 2-வது நாளாக மதுரை சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மண்டல அலுவலக வளாகத்தில் அமர்ந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து 2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவகர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின்ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பி.பி.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பா ளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கே.கே. நகர் மெயின் ரோடு, அண்ணா நகர் மெயின் ரோடு, சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியா புரம், பி.பி.சாவடி, கோச்சடை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணிகள் சரிவர நடைபெற வில்லை.
இதனால் அந்த பகுதிகளில் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதுடன் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி யடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் போராட் டத்தில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.