உள்ளூர் செய்திகள்
- தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.
- இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மதுரை
மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் நாளை 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது. இது குறித்து மதுரை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் கூறியிருப்பதாவது:-
மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரத்து 923 விற்பனை செய்யப்படுகிறது. தனி நபர் ஒரு நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். தங்கமானது பத்திர வடிவில் இருப்பதால் இது பாதுகாப்பான முதலீடு மட்டுமின்றி இம்முதலீட்டிற்கு கூடுதலாக ஒரு ஆண்டிற்கு 2.5% வட்டியும் கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.