உள்ளூர் செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

Published On 2023-01-18 08:33 GMT   |   Update On 2023-01-18 08:33 GMT
  • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
  • தலைக்கவசத்தின் அவசியம் பற்றியும் விளக்கி பேசினர்.

மதுரை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாடிப்பட்டி போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் சரவணமுருகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜய ரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பேசும்போது, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றியும், தலைக்கவசத்தின் அவசியம் பற்றியும் விளக்கி பேசினர். அப்போது, கடந்த ஆண்டு சாலை விபத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இனி வரும் காலங்களில் விபத்தே இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும், அது உங்கள் கையில் தான் உள்ளது. மிதவேகம் மிக நன்று, என்ற கருத்தை மனதில் கொண்டு வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்றனர். முடிவில் விவசாய ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News