உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு கடைகள் ஜே.சி.பி. மூலம் அகற்றப்பட்டது.

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-08-23 08:13 GMT   |   Update On 2022-08-23 08:13 GMT
  • சாலையோர ஆக்கிரமிப்புகள் 2-வது நாளாக அகற்றப்பட்டது.
  • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலூர் மெயின் ரோட்டில் யூனியன் அலுவலகம் அருகே சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

இந்தப்பணியில் மேலூர் நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், நகர அமைப்பு ஆய்வாளர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பாலமுருகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும்போது கடைக்கா ரர்களுக்கும், அலுவலர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த மேலூர் நகராட்சி கவுன்சிலர்கள் திவாகர், ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ள உதவினர். 2வது நாளாக இன்றும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

Tags:    

Similar News