உள்ளூர் செய்திகள்

போலீசாரின் வாகன தணிக்கையில் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்கள்

Published On 2022-11-27 08:25 GMT   |   Update On 2022-11-27 08:25 GMT
  • போலீசாரின் வாகன தணிக்கையில் கஞ்சாவுடன் வாலிபர்கள் சிக்கினர்.
  • கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருமங்கலம்

மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கஞ்சா கடத்தலை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் பகுதியில் நகர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பெத்தானியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 22), சமயநல்லூர் அருகே உள்ள ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த சூர்யா (21) ஆகிய 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்களை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவர்களிடம் 3 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது. அதனை அவர்கள் விற்பதற்காக ெகாண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கஞ்சா, ரூ. 2 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News