உள்ளூர் செய்திகள்

நகை வியாபாரி மகன்களிடம் போலீசார் விசாரணை

Published On 2022-07-04 09:05 GMT   |   Update On 2022-07-04 09:05 GMT
  • ரூ.41 லட்சம் மோசடி: மதுரை நகை வியாபாரி, மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
  • அவர்களுக்கு 56.876 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2.5 லட்சம் கொடுத்தேன். கடனுக்கு நகை தாருங்கள். நாங்கள் அதனை விற்று சில மாதங்களில் பணம் செலுத்தி விடுகிறோம்’ என்று தெரிவித்தனர்.

மதுரை

சேலம் சீலநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் குமார் (41). இவர் மதுரை மாநகர குற்றபுலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

அதில் நான் சேலம் மாவட்டத்தில் வெள்ளி ஆபரண நகைக்கடை நடத்தி வருகிறேன். மதுரை பி.பி.குளம், ரத்தினசாமி தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன்கள் பிரசன்ன வெங்கடேசன், அனந்த லட்சுமணன் ஆகியோர் என்னை தேடி வந்தனர். அவர்கள், நாங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுரம் பகுதியில் நகை கடை நடத்தி வருகிறோம். நீங்கள் கடனுக்கு நகை தாருங்கள். நாங்கள் அதனை விற்று சில மாதங்களில் பணம் செலுத்தி விடுகிறோம்' என்று தெரிவித்தனர்.

நான் அவர்களுக்கு 56.876 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2.5 லட்சம் கொடுத்தேன். இதனை பெற்றுக் கொண்ட அவர்கள், இதுவரை பணத்தை திருப்பி செலுத்தவில்லை. நகைகளையும் ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசார் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் குப்புசாமி மேற்பார்வையில், மாநகர குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா வழக்குப்பதிவு செய்து, நகை வியாபாரி கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன்கள் பிரசன்ன வெங்கடேசன், அனந்த லட்சுமணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News