உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் முகாமில் மேயர் இந்திராணி மனுக்களை பெற்றார். 

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2023-05-23 14:17 IST   |   Update On 2023-05-23 14:17:00 IST
  • மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
  • மேயர் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

மதுரை

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமை தாங்கி பொதுமக்க ளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

காலை 10 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி, பெயர் மாற்றம் வேண்டி 8 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 4 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 7 மனுக்களும், புதிய குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி 5 மனுக்களும், சொத்துவரி, ஆக்கிரமிப்பு மற்றும் சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட இதர கோரிக்கைகள் வேண்டி 30 மனுக்களும் என மொத்தம் 54 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இம்முகாமில் துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலை வர் சரவண புவனேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News