உள்ளூர் செய்திகள்

பாலமேடு அருகே வலையப்பட்டி ஊராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்

Published On 2022-09-30 07:04 GMT   |   Update On 2022-09-30 07:04 GMT
  • பாலமேடு அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
  • மலைப்பகுதியில் இருந்து வரும் நீர்நிலைகள், ஓடை வழியாக நேரடியாக நீர் செல்வதற்கு ஏதுவாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சியில் நீதிமன்ற உத்தரவின்படி மஞ்சமலை ஆற்று ஓடைப்பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

நீர்நிலைகள் செல்லும் ஓடைக்கரை பகுதியில் இருந்த விவசாய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், பிரே மா, ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயசந்திரன், துணை தலைவர் புஷ்பலதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா மற்றும் வருவாய் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறையினர் முன்னிலையில் நில அளவீடு செய்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

மலைப்பகுதியில் இருந்து வரும் நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகளின்றி ஓடை வழியாக நேரடியாக நீர் செல்வதற்கு ஏதுவாக அங்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

மேலும் ஊராட்சியில் உள்ள பல இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் படிப்படியாக அகற்றுவதற்கான நடவடிக் கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மஞ்சமலை ஓடை பகுதி யில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற பட்டு வருகிறது.

Tags:    

Similar News