உள்ளூர் செய்திகள்

தர நிர்ணய திட்ட விருது பெற்றதை முன்னிட்டு தலைமை மருத்துவருக்கு சக மருத்துவர்கள், செவிலியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

அரசு மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய திட்ட விருது

Published On 2022-09-14 13:51 IST   |   Update On 2022-09-14 13:51:00 IST
  • திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய திட்ட விருது கிடைத்துள்ளது.
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய சுகாதார குழு இந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய சுகாதார குழு ஆய்வு செய்தது. இதன்படி மருத்துவமனை உள் மற்றும் வெளிநோயாளி பிரிவுகள், மகப்பேறு பிரிவு, ரத்த பரிசோதனை நிலையம், எக்ஸ்ரே நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு மருத்துவமனையின் தரம் குறித்த அறிக்கை மத்திய-மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தேசிய தர நிர்ணய திட்ட விருது திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது. இந்த விருதினை தமிழக சுகாதார மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் நேற்று சென்னையில் நடந்த விழாவில் திருமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராம்குமாரிடம் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து இன்று காலையில் தேசிய தர நிர்ணய திட்ட விருது கிடைத்ததற்காக சக மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் தலைமை மருத்துவருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து தலைமை மருத்துவர் கூறுகையில், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் மத்திய குழு ஆய்வு செய்து அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியதற்காக மத்திய அரசின் பரிந்து ரையின்படி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய திட்ட விருதுவினை வழங்கிய மாநில அரசுக்கு மருத்துவர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Tags:    

Similar News