உள்ளூர் செய்திகள்

வியாபாரி-பெண்ணிடம் 43 பவுன் நகைகள் திருட்டு

Update: 2022-06-30 10:02 GMT
  • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வியாபாரி-பெண்ணிடம் 43 பவுன் நகைகள் திருட்டு நடந்துள்ளது
  • தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை தெற்கு வாசல் எழுத்தாணிக்கார தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (44). இவர் அந்த பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். அவருக்கு தேனியில் இருந்து 24 பவுன் நகை செய்து தரும்படி ஆர்டர் வந்துள்ளது.

ராஜசேகர்அந்த நகைகளுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். மோட்டார் சைக்கிள் முன்பு உள்ள பையில், 24 பவுன் நகையை வைத்திருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரப்பாளையம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மனைவி பூமதி (வயது 47). சம்பவத்தன்று மாலை இவர் ஷேர் ஆட்டோவில் அவனியாபுரத்தில் இருந்து, ஆரப்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பூமதியின் நகைப்பையை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர். அதில் 19 பவுன் தங்க நகைகள் இருந்தன.இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News